பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது.
சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.088 inch ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என அனைத்தும் உயர் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சமாக 48 எம்.பி. சோனி ஐ.எம்.எக்ஸ் 586 சென்சாரும், 2 எம்.பி. டெப்த் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் 64 ஜி.பி. மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 12,999 என்றும் 128 ஜி.பி. மாடலின் விலை ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் கடந்த மாத அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சியோமி Mi ஏ3-ன் சிறப்பம்சங்கள்:
– 6.088 inch 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– 4 ஜி.பி. LPDDR4 ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி