Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சல்மான் கானுக்கு “Y” பிரிவு…. அக்ஷய் குமாருக்கு “X” பிரிவு… மும்பை போலீசாரின் அதிரடி ஆக்ஷன்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வாங்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடிதத்தை சல்மான் கான் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்திருந்தார்.

அதன் பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்டு சல்மான் கான் விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவருக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கை மாநில அரசால் மிரட்டல் கடிதம் வந்ததையெடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கு எக்ஸ் பிரூவு பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |