Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுதந்திரமாக உலா வருது… அச்சத்தில் தவிக்கும் மக்கள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

 காட்டு யானை சாலையில் உலா வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் ஒற்றை யானை சில நாட்களாக உலா வருகிறது.

இதனையடுத்து யானை நடமாடி வருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூறும்போது சாலையில் நடமாடி வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்குமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |