கிறிஸ்துமஸ் பண்டிகை நாளுக்காக பல நாட்களாக குழந்தைகள் காத்திருப்பார்கள். காரணம் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசு பொருட்களை பெறுவதற்காக தான். நல்ல குழந்தைகளாக இருந்தால் மட்டும்தான், கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து பரிசு பொருட்களை பெற முடியும் என்றும் சொல்வார்கள். ஆனால் நிஜமாகவே கிறிஸ்துமஸ் தாத்தா என்று ஒருவர் இருக்கிறாரா? என்பது குறித்த சில தகவல்களை நாம் தெரிந்துக்கொள்வோம்.
அதாவது, குழந்தைகளுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயார் செய்யக்கூடிய ஒரு ஜாலியான நபரை தான் கிறிஸ்துமஸ் தாத்தாவாக கருதுகின்றனர். முதலாவதாக இவர் குழந்தைகளிடம் இருந்து அவர்களுக்கு பிடித்த பரிசுகள் என்ன என்பது கோரி கடிதங்களை பெறுவார் என்று கூறப்படுகிறது. இவர் வட துருவத்தில் வசிப்பதாக கூறபடுகிறது.
வெள்ளைதாடி, மகிழ்ச்சியான மனிதரின் கதை துருக்கியில் கி.பி 280ல் துவங்கியது. செயிண்ட் நிக்கோலஸ் என்ற துறவி ஏழைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உதவுவதற்காக பல்வேறு நன்மைகளை செய்வார் என தெரிகிறது. இந்த துறவி தன்னுடைய முழு செல்வத்தையும் ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தியுள்ளார்.
பிறகு இவர் குழந்தைகளின் பாதுகாவலராக மாறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் இல்லாத மக்களுக்கு உதவிசெய்யக்கூடிய நல்ல மனமுடைய மனிதராக உள்ளார் என்பதை நாம் அறிவோம். அதேபோல் நீங்களும் ஏழை-எளிய மக்களுக்கு உதவி இந்த கிறிஸ்துமஸை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.