தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காலனி மார்க்கெட், இந்திரா நகர், குருசடி காலனி போன்ற பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக காந்தலில் மூவுலக அரசியம்மன் கோவிலில் இருந்து பென்னட் மார்க்கெட் வரை இருக்கும் சாலையை தகரம் வைத்து அடைத்து விட்டனர்.
இதனை அடுத்து கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.