Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரும் என்னை பார்க்கிறார்களா…? அடுத்தடுத்து கைவரிசை காட்டிய நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை-விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சரளையில் உணவு விடுதி, மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஆட்டோ பழுது பார்க்கும் கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆட்டி, விற்பனை செய்யும் கடைகள் என பெரும்பாலானவை இயங்கி வருகிறது. இந்நிலையில் சரளையில் உள்ள கடைகளை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் வந்துள்ளனர். அப்போது செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார் உள்ளே சென்று பார்த்தபோது 30 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோன்று செல்வகுமார் கடை அருகில் உள்ள வெங்கடாசலம் என்பவருடைய பல்பொருள் அங்காடி மற்றும் சக்திவேலின் ஆட்டோ சர்வீஸ் சென்டரின் கதவு பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு எதுவும் திருட்டு போகவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் 3 பேரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெங்கடாசலம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கேமராவில் பதிவான காட்சிகளான “முககவசம் அணிந்த மர்மநபர் ஒருவர் பல்பொருள் அங்காடி முன்பு வந்து நிற்கிறார். இதனையடுத்து அந்த நபர் யாரும் தன்னை பார்க்கிறார்களா என்று  நோட்டமிட்டு பின், தான் கொண்டு வந்த இரும்பு கம்பியால் 2 ஷட்டர்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் அந்த நபர் வெளியே வந்ததோடு அருகில் இருந்த செல்வகுமார் எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அங்கு இருந்த 30 ஆயிரம் ரூபாயை அந்த நபர் திருடியுள்ளார்.

மேலும் அந்த நபர் சக்திவேல் என்பவரின் கடை பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். ஆனால் அங்கும் எதுவும் கிடைக்காததால் அந்த நபர் செல்வகுமார் கடையில் திருடிய 30 ஆயிரம் ரூபாயுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்” என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாச்லம் போன்றோர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |