ஆந்திராவில் மதுபானத்தின் விலையை 75% உயர்த்த போவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,
கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 45 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 7-ஆம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதேபோல் ஆந்திர மாநிலத்திலும் மதுபான கடைகள் திறக்கப்பட மது அருந்துவதை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு மதுபான விலையை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இதன்படி, மதுபானம் விற்பனைக்கு வரும் சமயத்தில் 75 சதவீதம் விலை அதிகரித்து வரும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்ததாவது, மதுபானம் அருந்துவதை தவிர்க்கவே இந்த விலையானது, நடைமுறைப்படுத்தபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் மாநில மக்கள் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு டாஸ்மாக் கடையை திறந்து இருக்கக்கூடாது என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்து வருகின்றனர்.