யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதியதாக FZS V3.0 மற்றும் MT-15 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் யமஹாவின் பி.எஸ். 6 வாகனம் ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த பி.எஸ். 6 சார்ந்த அப்டேட்களின் போது வாகனங்களின் ஒட்டுமொத்த விலையும் அதிகரிக்கும் என யமஹா நிறுவனம் கூறியுள்ளது. மேலும் வாகனத்தின் மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப 12 முதல் 15 சதவீதம் வரை வாகனங்களின் விலையானது அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு செய்த வேரியண்ட்களில் சைடு ஸ்டான்டு ஸ்விட்ச் அம்சம் கொடுக்கப்படலாம் .
இது வாகனத்தின் சைடு ஸ்டான்டு எடுக்கப்படாத நிலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய விடாது. இந்நிலையில் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட முதற்கட்ட வாகனங்கள் பற்றி யமஹா நிறுவனம் இதுவரை எந்த தகவலும் கொடுக்கவில்லை . குறிப்பாக இந்த ஆண்டு துவக்கம் முதலே யமாக நிறுவனம் பல்வேறு வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .
இதன்பின், தற்போது புதிதாக FZS V3.0 மற்றும் MT-15 மாடலை அறிமுகம் செய்துள்ளது . இந்த ஆர்15 வி3.0, எஃப்.இசட்25 மற்றும் ஃபேஸர் 25 மாடல்களின் ஏ.பி.எஸ். பதிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் சமீபத்தில் ஆர்15, எஃப்.இசட்.25 மற்றும் ரே இசட் ஸ்கூட்டர்களின் மான்ஸ்டர் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .