தனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை தூக்கி எறிய மனம் இல்லாமல் தன்னுடனே வைத்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமில் திரைத்துறையில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சூர்யா, விக்ரம், விஜய், ஆகியோருடன் பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்த்து வருகிறார். கமர்சியல் படம் அதிகமாக நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் வாங்கிக்கொடுத்துள்ளது. மேலும் அவர் தேசிய விருதும் இப்படத்திற்க்காக பெற்றுள்ளார். அதோடு ரஜினி-சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது கைவசம் 3 தெலுங்கு படங்களையும் வைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தனக்கு வந்த காதல் கடிதம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, நான் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எனக்கு, என் தீவிர ரசிகர் ஒருவர் கிப்ட் அளித்தார். அந்த கிப்டை நான் திறந்து பார்க்கும்போது, அதில் என் புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் ஒன்றும் ஒரு காதல் கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் என் மீது கொண்ட காதலை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதோடு, அவர் அதில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுருந்தார். நான் படித்த கல்லூரியில் எனக்கு இதுவரை ஒருவர் கூட காதல் கடிதம் கொடுக்கவில்லை. அதனால் அந்த ரசிகர் எனக்கு கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் எரிய மனமில்லாமல் பத்திரமாக என்னிடமே வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.