தோட்டத்திற்குள் யானை நுழைந்து வாழை மரங்களை சூறையாடிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு அருகில் இருக்கக்கூடிய பல்வேறு ஊர்களில் மா, வாழை, நெல் போன்றவை விளைவிக்க பட்டன. இந்நிலையில் விவசாயிகளுக்கு வேதனை அளிக்கும் விதமாக யானை அங்கு இருக்கக்கூடிய விளைநிலங்களை சூறையாடி வருகிறது. அவ்வகையில் வாழை தோட்டம் ஒன்றிற்குள் புகுந்த யானை அங்கிருந்த மரங்களை சூறையாடியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடித்தும் தீப்பந்தங்களை ஏற்றியும் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு அந்த யானையை விரட்டி அடித்தனர். இருப்பினும் அந்த யானை எந்த நேரத்திலும் தங்கள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடும் என்ற கவலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.