கொரோனா காரணத்தினால் நிறுத்தி வைக்கபட்ட சவாரிகள் தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முதுமலையின் புலிகள் காப்பகத்தை கொரோனா காரணத்தினால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வந்து சவாரி செய்யும் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறைந்த காரணத்தினால் தற்போது பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பயணிகள் சௌகரியமாக பயணம் செய்வதற்கு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருகின்றது. மேலும் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டதால் பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.