Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யானை தந்தங்களை விற்க முயற்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

யானை தந்தங்களை விற்க முயன்ற கேரள வாலிபர்கள் உள்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்வதாக வனத்துறை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் வனத்துறை வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் வனத்துறை தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள் மலை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் கேரள மாநிலம் பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று அடிக்கடி வந்துள்ளது. இதனையடுத்து ரகசியமாக வனத்துறையினர் அந்த காரை பின்தொடர்ந்தனர். அப்போது அந்த கார் பாலமலை கிராமத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றது. இதனை பின்தொடர்ந்து மதுரை பதிவு எண் கொண்ட மற்றொரு காரும் வந்தது.

அந்த காரில் வந்தவர்கள் யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து கேரள காரில் வந்தவர்களிடம் விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையறிந்த வனத்துறை தனிப்படையினர் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் காரைக்குடி பகுதியில் வசிக்கும் ராஜ்குமார், மதுரை தனக்கங்குளம் பகுதியில் வசிக்கின்ற பிரகாஷ், சந்திரன், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசிக்கும் சிபின் தாமஸ், மலப்புரம் பகுதியில் வசிக்கும் அப்துல் ரசீத், கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் சுதாகர், பெருமாள்மலை பகுதியில் வசிக்கும் ஜோசப் சேவியர், பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பிரபாகரன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் 8 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 2 யானை தந்தங்கள், 2 சொகுசு கார்கள், நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவர்கள் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்ததால் அவர்கள் யானையை வேட்டையாடி தந்தத்தை எடுத்து வந்தார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |