Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு அவ்வளவு வயதாகவில்லை” ஓய்வு பற்றி ஹர்பஜன் சிங் அதிரடி பதில்….!!

ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவதற்கான முடிவினை நான் எடுக்கவில்லை என்றும் தனக்கு வயதாகவில்லை என்றும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஹர்பஜன்சிங் தனியார் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது தாங்கள் என் திறமையினை ஆராய விருப்பப்பட்டால் இளம் வீரர்களின் சிறந்தவராக கருதும் ஒருவரை என்னுடன் போட்டியிட சொல்லுங்கள். அப்போட்டியில், பீல்டிங் செய்யும்போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலும்? குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் தடுமாறினாளும்? வயதை பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நான் இந்திய அணி சீருடையை அணிந்து 800 நாட்களுக்கு மேலாக களத்தினில் விளையாடி இருக்கின்றேன். அதனால் நான் ஒரு சாதனையாளன் என்றும் தனக்கு எவருடைய அனுதாபங்களும் தேவைப்படாது என்றும் கூறியுள்ளார். அசாருதீன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த நாள் முதல் 20 வருடங்களாக தொடர்ந்து என் விளையாட்டு பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன் என்றும் கூறினார்.

தனக்கு அதிக வயதாகி விட்டது என உணரவைக்க முயற்சி செய்கிறீர்கள் என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியை பற்றி பேசிய ஹர்பஜன் சிங் “இப்போட்டியை எனக்கு கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்” என் உடல் நிலையைப் பொறுத்து தான் எத்தகைய முடிவையும் மேற்கொள்வேன் என கூறினார்.சென்ற நான்கு மாதங்களுக்கு மேலாக யோகா, ஓய்வு, பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு 2013-ஆம் வருடத்தில் இருந்ததைப் போலவே புத்துணர்வை பெற்றுள்ளேன். அவ்வாண்டு நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தான் 24 விக்கட்டுகளை வீழ்த்தியதாக ஹர்பஜன் பெருமிதம் கூறியுள்ளார்.

Categories

Tech |