Categories
உலக செய்திகள்

எங்கள் பேரரசன் தான் உலகின் முதல் விமானி… ராவணனை கொண்டாடும் இலங்கை அரசு…!!

எங்கள் அரசன் ராவணன் தான் உலகின் முதல் விமானி என இலங்கை அரசு தெரிவித்து கொண்டாடி வருகின்றது.

5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக விமானத்தை இயக்கிய உலகின் முதல் விமானி ராவணன். தங்களுடைய பெருமைக்குரிய பேரரசன் என ராவணனை நிரூபணம் செய்ய மக்களுக்கு ஏதாவது ஆதாரம் கிடைத்தால் இலங்கை அரசுக்கு அறிவிக்கலாம் என்று விமானத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராவணன் ராமாயணத்தில் சீதையை ஆகாய விமானம் மூலம் கடத்தி சென்று இலங்கை நாட்டில் சிறையில் அடைப்பதாக சொல்லப்படுகிறது. இத்தகைய காரணத்தால் ராவணன்தான் முதன்முதலாக விமானத்தை பயன்படுத்திய உலகின் முதல் விமானி என இலங்கை அரசு கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பாக விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய விளம்பரத்தில், “மன்னன் இராவணன் சார்ந்த ஆதாரங்கள் மற்றும் புத்தகங்கள் ஏதாவது இருந்தால் அதை இலங்கை அரசிடம் கொடுங்கள்.

ராவணனின் பெருமையைப் பற்றியும் நமது நாட்டின் விமான ஆதிக்க பாரம்பரியத்தை பற்றியும் ஆராய்ச்சி நடத்துவதாக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு ராவணன் தொடர்பான ஆவணங்கள் உதவியாக இருக்கும்” என இலங்கை அரசு கூறியுள்ளது. அதே சமயத்தில் விமானப் போக்குவரத்து ஆணைய முன்னாள் துணைத்தலைவர் சஷி தனதுக்கே அளித்த பேட்டியில் ராவணனை பெருமித படுத்தியுள்ளார். அதில் “மன்னர் ராவணன் ஒரு மேதை எனவும் ஆகாயத்தில் பறந்த முதல் நபர் மற்றும் ஒரு விமானி எனவும் கூறியுள்ளார். இக்கதையானது ஒரு புராணக்கதை இல்லை. உண்மை கதையே ஆகும். இதனை நிரூபிக்க விளக்கமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. வருகின்ற இந்த ஆண்டுக்குள் விரைவில் நிரூபிப்போம்” என கூறியுள்ளனர். சென்ற வருடம் கட்டுநாயக்கா விமானப் போக்குவரத்துத்துறை சார்பில் நடந்த மிகப்பெரிய கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள், புவியியல், தொல்லியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் பங்கேற்றனர். அக்கருத்தரங்கில் உலகின் முதல் விஞ்ஞானி ராவணன் என்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கை தங்களுடைய ஏவுகணைக்கு ராவணா என பெயர் சூட்டி இருக்கின்றது.

Categories

Tech |