பஞ்சாப் அணி வீரர் கே.எல். ராகுலை ,சாமர்த்தியமாக அவுட் செய்ததற்காக ,ராஜஸ்தான் அணி வீரரான ராகுல் திவாட்டியாவுக்கு ,பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .
2021 சீசனின் ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகள் மோதின .பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் களமிறங்கிய, அதன்பின் தீபக் ஹூடா களமிறங்கினார் . இருவரின் ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு களை ,இருவரும் சிக்சர்களாகவும் , பவுண்டரிகளாகவும் , அடித்து பறக்க விட்டனர். இறுதியில் பஞ்சாப் அணி ,20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு , 221 ரன்களை எடுத்தது.தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 91 ரன்கள் மற்றும் தீபக் 26 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் இறுதி ஓவரில் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். அவர் இறுதி ஓவரில் , ஆவேசத்துடன் பந்தை அடிக்க, பந்து அடித்த வேகத்திற்கு சிக்சராக சென்று கொண்டிருந்தபோது ,எதிரணி வீரரான ராகுல் திவாட்டியா ,சாமர்த்தியமாக கேட்ச் பிடித்தார். பவுலிங் லைன் அருகே நின்று கொண்டிருந்த, ராகுல் திவாட்டியா பவுண்டரி லைனை , தாண்டி வந்து விழுவதற்குள் ,எட்டிப்பிடித்து தூக்கி வீசி எறிந்தார். இதனால் பவுண்டரி லைனில் கால் வைப்பதற்குள் ,பந்தை வீசி எறிந்து சாமர்த்தியமாக ராகுலை அவுட் செய்தார். இணையதளத்தில் பலரும் ராகுல் திவாட்டியா பிடித்த கேட்ச்க்கு, பாராட்டு தெரிவித்துள்ளனர் .
https://twitter.com/sportstigerapp/status/1381650564400832513
What a catch! #RahulTewatia #IPL2021 #cricket #RRvPBKS https://t.co/dqKt7irwfC
— CricketTimes.com (@CricketTimesHQ) April 13, 2021