செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், 2665 பொதுக்குழு உறுப்பினர் இவர்கள்தான் அதிகாரப் பூர்வமாக எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க கூடியவர், முடிவு எடுக்கக் கூடியவர்கள், விவாதிக்கக் கூடிய அதிகாரம் இருப்பவர்கள், எடுத்த முடிவுகளை ஒப்புதல் வழங்கியது 2665 பேருக்கு. இந்த 2665 பேரில் ஏறத்தாழ 2,200 பேருக்கு அன்றைக்கு கையொப்பமிட்டு சில பேரிடம் கையொப்பம் வாங்க முடியவில்லை, கையொப்பம் வாங்கி இருந்தால் 2665 பேருமே ஓட்டு போட்டு இருப்பார்கள்.
அதில் மாற்று கருத்து இல்லை. ஆகவே பெரும்பான்மையாக இருக்கக் கூடிய அதிகாரம் படைத்த பொதுக்குழுவில் விவாதித்து, அதை நிறைவேற்ற அந்த ஜனநாயக கடமை அடிப்படையில்தான்….. ஆகவே தான் இன்றைக்கு பாசமிகு அண்ணன் எடப்பாடி அவர்கள் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும். அண்ணன் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களை தள்ளி வைத்துவிட்டு செய்ய வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை.
அவரும் இருந்து, இந்த இடத்திலே மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தான் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் சீர்திருத்தத்திற்கே நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அவர் ஏன் மறுக்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை ? அந்த சீர்திருத்தத்திற்கு அவர் உடன்பட்டு வந்தால் நிச்சயமாக எல்லோருடைய மனதிலும் அவர் உயர்ந்து நிற்பார்.
தொண்டர்கள் முன்வைக்கின்ற சீர்திருத்தம், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்வைக்கின்ற அந்த சீர்திருத்த கோரிக்கையை அவர் மனதார ஏற்றுக்கொண்டு, அவரே முன் நின்று வழிமொழிந்து இருந்தால் ஒன்றரை கோடி உண்மை தொண்டர்கள் இருதய மனதிலேயே அவர் இமயத்தின் அளவிற்கு உயர்ந்து இருப்பார். இன்றைக்கு அவர் விழுந்து விட்டார் என்பதை நான் சொல்லவில்லை ஊடகங்கள் சொல்கிறது.
எடப்பாடியார் பக்கம் தான் பெரும்பான்மை இருக்கின்றது நீங்கள் பார்த்தீர்கள், அம்மா அவர்கள் வருகிற போது எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ, அப்படி ஒரு எழுச்சி பொதுக்குழு வருகிறபோது…. இரண்டு பேரும் வந்தார்கள், இதை யாரும் சொல்லி வைத்து செய்வது கிடையாது… 10 பேர் இருக்கும் இடத்தில் சொல்லலாம், ஒரு லட்சம் பேர் இருக்கும் இடத்தில் எப்படி சொல்ல முடியும்? ஒரு லட்சம் பேர் கூடி அண்ணன் எடப்பாடி அவர்களை வரவேற்று மாலை அணிவித்து அங்கே பொதுக்குழுவில் பங்கேற்கிறார்கள் என தெரிவித்தார்.