தமிழக முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை.
இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கொரோனாவின் கோர முகம் முதல்வரின் வீட்டையும் விட்டுவைக்கவில்லை என்பதை உணர்த்தியது.
இதையடுத்து தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு தலைமைக்காவலராக முதல்வர் இல்லத்தில் பணியாற்றிய அந்த பெண் 30ஆம் தேதியில் இருந்து அங்கு இல்லாமல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் கடந்த 3ம் தேதி அந்த பெண் தலைமை காவலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் முடிவு 6ம் தேதி வந்ததில் அவருக்கு கொரோனா இல்லை என காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை பணியாற்றும் அனைவருக்கும் நோய் தொற்று வராமல் இருக்க அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கையில் சென்னை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.