Categories
தேசிய செய்திகள்

யப்பாடா…! ”அனுப்பிட்டாங்க” தொழிலாளர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பு …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்தஊருக்கு அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மாநிலம் விட்டு மாநிலம் வேலை செய்யக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில்  பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு நடைப் பயணம் மேற்கொள்கிறார்கள். இது நாடு முழுவதும் நிகழ்ந்தது. எனவே அந்தந்த மாநில அரசாங்கம் அவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள வேண்டும், அவர்களை பத்திரமாக வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இதில் குழந்தைகளும் ஏராளமானோர் இருக்கிறது என்பது போன்ற சில விமர்சனங்களும் கூட வந்தன.

இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு பாயிண்டு பாயிண்ட் என்று சொல்லக்கூடிய சிறப்பு ரயில் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அந்த வகையில் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக தெலுங்கானாவில் உள்ள தொழிலாளர்கள் 1,200 பேர் ரயிலில் தங்கள் சொந்த ஊரான ஜார்கண்ட்க்கு பயணம் செய்கிறார்கள்.

Categories

Tech |