நடிகர் விஜய் சேதுபதி குழந்தையை கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எதார்த்தத்தை காட்டுபவர். ஒரு கடும் பாதையை கடந்து சினிமா துறையில் உயரத்தை எட்டியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களையே எப்பொழுதும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியோரு இயல்பான வீடியோகாட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தாடியும் மீசையுமாக இருக்கும் விஜய் சேதுபதியின் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக பிரச்சனைகளுக்கு தயங்காமல் குரல் கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி.
தற்போது ஒரு குழந்தையுடன் கொஞ்சம் அந்த வீடியோ ரசிகர்களின் இதயத்தை தொட்டு விட்டது. அந்தக் குழந்தை அவரது ரசிகரா அல்லது உறவினர்களின் குழந்தையா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் வெளியில் தெரியாமல் வேலை இழந்து தவித்த சினிமா தொழில்அதிபர்களுக்கும், நலிந்து மக்களுக்கும் உதவி செய்துவரும் இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். மேலும் க.பெ. ரணசிங்கம், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் போன்ற இவரது படங்கள் ஊரடங்கு முடிந்து தியேட்டர்களில் ரிலீசுக்கு வரிசையில் உள்ளது.