விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ இதோ.
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் இறுதியில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்திப்பது வழக்கம். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சரியான முறையில் உள்ளார்களா? இல்லை தவறான முறையில் செயல்படுகிறார்களா என்று எடுத்துச் சொல்வதுசொல்வார். அந்த வகையில் இந்த வாரம் கமல் சார் அவர்களை சந்திக்கும் என்று எபிசோடு வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, “கெஞ்சினா மிஞ்சுறது மிஞ்சினா கெஞ்சுறது-னு ஒரு பழமொழி உண்டு. அது நிறைய இந்த வீட்டுக்குள்ள நடக்குது.
நுனியில் நிக்கிறவன லைட்டா தள்ளிவிட்டாலே போதும் கீழ விழுந்துடுவாங்கன்னு ஒரு லாஜிக் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி யார் நுனியில நிக்கிறாங்கன்னு புரிஞ்சுகிட்டு அதை செய்யணும். இல்லன்னா தள்ளுற ஆளே கீழ விழுந்துடுவாங்க… பார்க்கலாம் யார் விழறாங்கன்னு… இவ்வாறு பூடகமாக பேசியுள்ளார் கமல்ஹாசன். இதனை பார்த்த ரசிகர்கள் யாரை சொல்கிறார் தனலெட்சுமியா, மகேஸ்வரியா அல்லது அசீம்மா என குழம்பி வருகின்றனர். இந்த வாரம் டிஆர்பி டாஸ்க்கில் அசீமுக்கும், தனலெட்சுமிக்கும் இடையே பல முறை மோதல் ஏற்பட்டுள்ளது. இதே மாதிரி அசீம்முக்கும் மகேஸ்வரிக்கும் இடையிலேயும் பலமுறை மோதல் ஏற்பட்டது. இதனால் யாரை கமல் குறி வைக்கிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.