தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் குறித்து இயக்குனர் மித்ரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் “துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல விமர்சனங்களுக்கு உள்ளானர். இருப்பினும் சோர்வடையாமல் அடுத்த படத்தில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடினார். இதனை தொடர்ந்து திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன் போன்ற படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த ‘யாரடி நீ மோகினி” திரைப்படம் தனுஷின் திரை வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஏனென்றால் இதற்கு முன்னாடி தனுஷ் நடித்த படங்கள் இளைஞர்களை ஈர்த்தது. ஆனால் இந்த படம் இளைஞர்கள், பெண்கள் உள்பட குடும்ப ரசிகர்களையும் ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “அதில் இப்படம் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 14 வருடங்கள் முடிந்து விட்டது” என்று கொண்டாடும் வகையில் பதிவிட்டு இருந்தார்.
14 Years of #YaaradiNeeMohini 🙏 Thank u all for the love ❤️ #14YearsofBBYNM@dhanushkraja @thisisysr #raghuvaran #Nayanthara pic.twitter.com/3uVKaNgASl
— Mithran R Jawahar (@MithranRJawahar) April 4, 2022
இயக்குனரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தையும் மித்ரன் இயக்குகிறார் என்பதால் அவரிடம் இப்படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் தற்போது தனது கட்டாய வெற்றியை நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்திரன் இப்படத்தை இயக்குகிறார் என்றதால் இப்படமும் வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.