பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 11-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையில் மாணவியின் தாய் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் , வீட்டில் தனிமையில் இருந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், “இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது. தனக்கு ஆறுதல் கூற கூட யாருமே இல்லை. இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.
பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத் கொடுக்க வேண்டும். உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகிய யாரையும் நம்பக்கூடாது. தாயின் கருவறை மற்றும் கல்லறையும் தான் பாதுகாப்பான இடம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்பின் காவல்துறையினர் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் மாணவி தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தொடரப்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.