Categories
பல்சுவை

யாருக்கானது…? பொறியியல் தினம்…. என்ன செய்தார் விஸ்வேஸ்வரய்யா …!!

அன்னையர் தினம் , தந்தையர் தினம் , நண்பர்கள் தினம் வரிசையில் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவது தான் பொறியியல் தினம்.பொறியியலில் ஆர்வம் உள்ள அனைவர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு இன்று  பொறியியல் தினத்தை கொண்டாடுகின்றனர்.தேசத்தின் பொறியிலின் தந்தை என்று போற்றப்படும்  விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15_ ஆம் தேதியை தான் ஆண்டு தோறும் பொறியாளர் தினமாக கருதப்படுகின்றது.

விஸ்வேஸ்வரய்யா செய்த பணிகள் என்னென்ன ? 

நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு மைசூரில் பிறந்த விஸ்வேஸ்வரய்யா, நாட்டின் பாசனத்துறை வளர்ச்சி மற்றும் அணைக்கட்டு திட்டங்களின் முன்னோடியாக விளங்கினார்.

இதனால்  கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையின்ன்  சிற்பி என்று இவர் பாராட்டப்படுகிறார்.

அணைக்கட்டு நிர்வாகத்தில் தானியங்கி மதகை கண்டுபிடித்த பெருமைக்கு சொந்தக்காரராகவும் இவர் விளங்குகின்றார்.

பாசனத் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆலைகள், பொறியில் கல்லூரிகள், பல்கலைக்கழகம் என பலவற்றை உருவாக்கியவராகவும்  கொண்டாடப்படுகின்றார்.

இவர் பொருளாதாரத்துக்கான திட்டமிடலை முன்வைத்த முன்னோடி அறிஞராகவும் போற்றப்படுகின்றார்.

விஸ்வேஸ்வரய்யா தன்னுடைய வாழ்நாள் இறுதிக்காலம் வரை பணி செய்வதை வழக்கம் வைத்திருந்தார்.

Categories

Tech |