Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரும் இப்படி பண்ணாதீங்க…. வீட்டில் பற்றி எரிந்த தீ…. ஈரோட்டில் பரபரப்பு….!!

விறகு அடுப்பில் சமைத்து விட்டு தீயை அணைக்காமல் சென்றதால் குடிசை வீடு பற்றி எரிந்தது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குட்டை பாளையத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் லட்சுமி விறகு அடுப்பில் சமைத்து விட்டு தீயை அணைக்காமல் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அடுப்பிலிருந்து தீ மளமளவென குடிசை வீட்டில் பற்றி எரிய தொடங்கியது.

இதனை பார்த்ததும் அருகில் இருப்பவர்கள் ஓடிச்சென்று வீட்டில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் இந்த தீவிபத்தில் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |