Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்’ …. ஒரே நேரத்தில் 2 லீக் ஆட்டங்கள் ….! ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

2021 சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.இதில் மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் வருகிற அக்டோபர் 8-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது .இதில் கடைசி நாளான 8-ம் தேதி 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .இதில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது இதைதொடர்ந்து  இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் போட்டி அட்டவணையில் பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது. அதன்படி இந்த 2 போட்டிகளும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனால் ரசிகர்கள் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே நேரலையில்  பார்க்க முடியும்.

Categories

Tech |