Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யாரும் இனி தப்பிக்கவே முடியாது…. 4 1/2 கோடி ரூபாய் மதிப்பில்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வேலூரில் 4 1/2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. எனவே மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, விபத்துக்கள் போன்றவை அதிகமாக நடைபெற்று வருவதால் பாதுகாப்பு முறைகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வடக்கு போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது. இதற்காக 4 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மாவட்டம் முழுவதும் 953 கேமராக்கள் உயர் கோபுரத்தில் பொருத்தப்பட இருக்கிறது. இதனால் வேலூர்- ஆற்காடு சாலை சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகிலும், கலெக்டர் அலுவலகம் அருகிலும் உயர்கோபுர கம்பத்தில் அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன், திட்டமேலாளர் மோகன்குமார், மற்றும் அதிகாரிகள் பலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Categories

Tech |