Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்கவே முடியாது…. நடைபெறும் தீவிர சோதனை…. போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இதனால் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பெரும்பாலான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் மட்டும் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது இந்த மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் மட்டும் 89 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்த 333 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த மாதத்தில் 750 கனரக வாகனங்கள் மீதும், இந்த மாதத்தில் 23 நாட்களில் 1,250 கனரக வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிக பாரம் ஏற்றி சென்ற  வாகன உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் 40 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிக பாரம் ஏற்றி அனுப்பும் கல்குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களையும், உரிய ஆவணங்கள் இல்லாதவர்களையும் காவல்துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஹெல்மெட் அணியாமல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 92 நபர்கள் சிக்கினர். அதன்பின் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிக பாரம் ஏற்றி வந்த 98 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Categories

Tech |