நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவிற்கு , விமர்சனங்கள் எழுந்து வருகிறது .
நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக சென்னை ஆடுகளத்தில் ,மும்பை இந்தியன்ஸ் விளையாடி வந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சவாலாக இருந்ததால், வீரர்கள் ரன்களை குவிக்க திணறி வந்தனர். குறிப்பாக மும்பை அணியின் அதிரடி வீரரான இஷான் கிஷன், 73 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இதனால் நேற்றைய போட்டியில் அவருக்கு பதிலாக கோல்டர் நைல் களமிறக்கப்பட்டார். இதற்கு ரசிகர்களிடம் கடும் விமர்சனங்கள் கிளம்பி வருகிறது.
இதுபற்றி முன்னாள் வீரர் பிரைன் லாரா கூறும்போது, சில நேரங்களில் மும்பை அணி சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அதோடு நேற்றைய போட்டி டெல்லியில் நடைபெற்றதால் இஷான் கிஷனுக்கு, மேலும் ஒரு வாய்ப்பை கொடுத்து இருக்கலாம். அவ்வாறு கொடுத்திருந்தால் அவர் சிறப்பாக விளையாடி இருப்பார், என்று அவர் தெரிவித்துள்ளார். இஷான் கிஷனுக்கு பதிலாக களமிறங்கிய ,கோல்டன் நைல் 4 ஓவர்களில் பந்துவீசி 35 ரன்களை விட்டுக் கொடுத்து, விக்கெட்டை இழக்க தவறி விட்டார் . இதனால் கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவிற்கு, ரசிகர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.