Categories
தேசிய செய்திகள்

‘யாஸ்’ புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் யாஷ் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ள யாஸ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த புயல் அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் வலுவடைய உள்ளதாகவும், அது நகர்ந்து புயலாக உருவாகும். அதன்பின் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 26 ஆம் தேதி மாலையில் மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா, வங்காளதேசம் ஆகிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |