Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

யாசகம் மூலம் சேர்த்த 10,000 ரூபாய்… மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்…!!

யாசகம் மூலம் சேர்த்து வைத்த பணத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி(70). இவர் கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று சேர்ந்த பணத்தை அங்குள்ள பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் .  மேலும் 400 பள்ளிகளுக்கு தேவையான கல்வி  உபகரணங்களை வழங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மதுரையில் யாசகம் மூலம் பெற்ற பணத்தை கொரோனா காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்றோருக்கு  வழங்கினார். மேலும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தார்.

இந்நிலையில் பூல்பாண்டி யாசகம் மூலம் சேர்த்து வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் வழங்கி அதனை கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்களுக்கு வழங்குமாறு கூறினார். இதுகுறித்து பூல்பாண்டி  கூறுகையில் நான் ஒவ்வொரு பகுதியிலும் யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை அந்தந்த பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு வழங்கி வந்தேன். தற்போது கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வருமானமின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவி வருகிறேன். நான் யாசகம் பெறுவதை எனது குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும்  மக்களுக்கு உதவி செய்வது எனக்கு மன திருப்தி அளிக்கிறது என்றார்.

Categories

Tech |