Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு…. அவரே அளித்த விளக்கம்….!!!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள நடிகைக்கு பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான பியர்ல் புரி பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து பலர் சமூக வலைத் தளத்தின் வாயிலாக நடிகர் பியர்ல் புரியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் அவர் குற்றமற்றவர் என்று கூறி வருகின்றனர்.அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் நடிகர் பியர்ல் புரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, பியர்ல் புரி அமைதியாக பேசக்கூடிய மனிதர். எனக்கு தெரிந்த அன்பானவர்களுள் அவரும் ஒருவர். உண்மை தெரியும் வரை காத்திருப்போம். நான் தற்போது பியர்ல் புரிக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |