Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து”… இளைஞர் படுகாயம்.!

சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாரிங்டன் சாலையோரம் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு கார் ஓன்று திடீரென அவர் மீது வேகமாக மோதியது.  இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் அருகில் இருந்த கடை ஒன்றும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காவல் துறையினர் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Image result for நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து

காயமடைந்த ஊழியர் பரத் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்  நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும்  காரில் இருந்தவர்கள் மது அருந்தியதாக கூறப்படும் நிலையில், அதுவே விபத்துக்கு காரணம் என்று  சொல்லப்படுகிறது.

Categories

Tech |