யாஷிகா ஆனந்த் கைப்பிடி உதவியுடன் நடக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் யாஷிகா ஆனந்த் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார். கடந்த ஜூலை மாதம் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி செட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்புகள் உடைந்தன. இதற்காக இவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கைப்பிடி உதவியுடன் இவர் நடக்க முயற்சித்து வருவது போல ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த பதிவில், ”குழந்தை நடை, 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் எந்த ஆதரவும் இல்லாமல் மீண்டும் என் காலில் வலுப்பெறுவேன் என்று நம்புகிறேன்”. என தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CVkpT4lBIo6/