Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. மகன்களுக்காக அதை தியாகம் செய்த நயன்தாரா….. பர்ஃபெக்ட் அம்மாவை புகழ்ந்து தள்ளிய விக்கி…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. மலையாள சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான நயன்தாரா தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அடி எடுத்து வைத்தார். தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றவர். பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய 38-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போதும் நடிகர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, ஒரு சுவாரசிய தகவலையும் பகிர்ந்தார். அதாவது நயன்தாராவுக்கு குழந்தைகள் அடிக்கடி முத்தம் கொடுப்பதால் தற்போது வீட்டில் இருக்கும் போது மேக்கப் போடுவதை தவிர்த்து விட்டாராம். மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் பலரும் குழந்தைகளுக்காக நயன் பர்ஃபெக்ட் அம்மாவாக மாறி தியாகம் செய்துவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.

Categories

Tech |