கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜிமானா செய்த நிலையில், காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி முடிவுக்குவந்தது. இதனிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜக ஆட்சியமைத்தது.
இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் 68% வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதன் விவரங்கள் இதோ:
சிவாஜி நகர் – காங்கிரஸ் முன்னிலை
ஹுன்சூர் – காங்கிரஸ் முன்னிலை
ஹிரேகேகூர் – பாஜக வேட்பாளர் பி.சி.பாட்டீல் வெற்றி
ராணிபென்னூர் – பாஜக வேட்பாளர் அருண் குமார் பூஜா வெற்றி
மகாலெச்சுமி லேஅவுட் – பாஜக முன்னிலை
கே.ஆர்.புரம் – பாஜக முன்னிலை
கே.ஆர். பேட் – பாஜக வேட்பாளர் நாராயண் கவுடா வெற்றி
யஷ்வந்த்பூர் – பாஜக முன்னிலை
சிக்பளாப்பூர் – பாஜக முன்னிலை
விஜயநகரா – பாஜக முன்னிலை
அத்தானி – பாஜக வேட்பாளர் மஹேஷ் குமடல்லி வெற்றி
கோகாக் – பாஜக முன்னிலை
ஹொசாகொட் – சுயேட்சை வேட்பாளர் கஜிகவுடா முன்னிலை
காக்வாட் – பாஜக வேட்பாளர் ஸ்ரீமாத் பாட்டீல் வெற்றி
எல்லாபூரா – பாஜக வேட்பாளர் சிவராம் ஹெப்பார் வெற்றி
இந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியால் பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.