ஏலக்காயில் சளி, தொண்டை வலி, வறட்டு இருமல் போன்றவற்றை நீங்க கூடிய சக்தி இருக்கிறது. அதைப் பற்றி அறிந்து செயல்படுவோம்..!
ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். சளி இருப்பவர்கள், மூச்சுவிட சிரமப்படுவார்கள், அடிக்கடி இருமுவதால் வயிற்றுவலி உள்ளவர்கள் கூட ஏலக்காயை தினமும் சாப்பிடுவதால் அவர்களுக்கு சளி மற்றும் தொடர் இருமல் அனைத்தும் குறைந்து விடும்.
சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும், அவர்கள் இந்த ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் மிளகு, சேர்ப்பது ரொம்ப அவசியம். ஆனால் உணவுகளில் ஏலக்காய் சேர்க்கும் பொழுது அதிக அளவு சேர்க்க கூடாது.
ஏலக்காயை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு மண்டலம் வலுவாகும். கண்பார்வையும் அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி, துளசிச் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
இருமல் இருப்பவர்கள் 4 ஏலக்காய் மற்றும் சுக்கு இரண்டையும் அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் வரட்டு இருமல், தொண்டைவலி குணமாகும்.
தலைவலிக்கு இது மிகவும் எளிய வைத்தியம் ஆகும். 4 ஏலக்காய் 4 கிராம்பு, வெற்றிலைஆகிய மூன்றையும் நன்றாக பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
வாயு தொல்லை இருப்பவர்கள் ஏலக்காயை நன்கு காய வைத்து அதை பொடியாக்கி, தண்ணீர் கொதிக்க வைத்து அதில் அரை ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் போடி சேர்த்து குடித்து வந்தால் வாயு தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் அதற்கு 4 ஏலக்காயை அடுப்பில் போட்டு அந்தப் புகையை ஆவி பிடிக்க வைக்க வேண்டும். அப்படி ஆவி பிடித்தால் ஜலதோஷம் உடனே நீங்கி விடும்.