விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் காய்கறி விலையால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தொடர் மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, காய்கறிகளின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி 75 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ முருங்கைக்காய் 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வரத்து குறைவால் மும்பையில் இருந்து மட்டுமே முருங்கை கொண்டு வரப்படுவதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பீன்ஸ், அவரைக்காய் கத்தரிக்காய் வெண்டைக்காய் குடைமிளகாய் ஆகியவற்றின் விலை சதமடிக்க நெருங்கிக்கொண்டிருக்கிறது. தாறுமாறாக அதிகரித்து வரும் காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.