Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டின் மீது எந்த ஒரு அணு ஆயுத தாக்குதல் நடந்தாலோ…. அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!!!

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதியில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்டுள்ள ஏவுகணைக்கு  பயந்து, ஒரு கட்டத்தில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீடு மற்றும் மற்றும் நிலத்தடி பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகொரியாவின் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், தென் கொரியாவும் தங்களது சொந்த ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றது.

மேலும் நவம்பர் 3ம் தேதி வியாழக்கிழமை அன்று வடகொரியா சந்தேகத்திற்குரிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்து இருக்கலாம் என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வட கொரியாவின் எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும், கிம் ஜாங் உன் ஆட்சியின் இறுதி முடிவாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதல் அல்லது மூலோபாயமற்ற அணு ஆயுத தாக்குதல்கள் உட்பட எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அதுவே கிம் ஜாங் உன் ஆட்சியின் முடிவு என அந்நாட்டில் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப்பிடம் சந்தித்து கூறியுள்ளார்.

Categories

Tech |