சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. அந்த கால்வாய்தான் உலகிலேயே மிக பெரிய கால்வாய் ஆகும். அந்த கால்வாயில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து அதிகாரிகள் கூறியதாவது “எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளது. மேலும் அந்த கப்பல் கால்வாயில் 54 கி.மீ தூரத்தில் மாட்டியுள்ளது. இதனால் துறைமுகத்தில் இருந்து வெளியேற வேண்டிய நான்கு கப்பல்களும் வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளது. இதன் காரணமாக சூயஸ் கால்வாயில் போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பலை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளனர். அதாவது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பல் தென் அமெரிக்க நாடான பனாமாவை சேர்ந்தது என கூறப்படுகிறது. மேலும் அந்த சரக்கு கப்பல் 32 மீட்டர் அகலமும் 225 மீட்டர் நீளமும் கொண்டதாகவும் சூடான் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டில் சூயஸ் கால்வாயில் இந்த மாதிரி நடப்பது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் எவர்க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த ‘எவர்கிவன்’ என்னும் 400 மீட்டர் நீளமுள்ள கண்டைனர் கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயில் தரைதட்டி குறுக்கே சிக்கியுள்ளது. இதனையடுத்து கால்வாயில் சிக்கிய அந்த கப்பல் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. அதன்பின் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் காரணமாக எகிப்து நாட்டுக்கு மில்லியன் அளவிலான வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் 6.5 பில்லியன் பவுண்டுகள் கணக்கில் வர்த்தகம் தாமதமாகியுள்ளது.