லடாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை 16 மணி நேரமாக நீடித்து வருகிறது
லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தால் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் உருவானது. இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே ஜூன் மாதத்தில் உருவான வன்முறையால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியா மற்றும் சீன ராணுவம் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி படைகளைத் திரும்பப் பெற்று பதட்டத்தை தணிப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சியின் பலனாக கடந்த 10 ஆம் தேதி கிழக்கு லடாக்கில் படை விலக்கல் தொடங்கியுள்ளது .
மேலும் பாங்கோ சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்து படைகளை திரும்பபெறுவதற்காக இருதரப்பும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இந்த படை விலக்கல் நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்காக இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தை சுமார் 16 மணி நேரம் நீடித்தது. எல்லைப் பகுதியான மோல்ட்டோவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கி காலை 2 மணி வரை நீடித்துள்ளது.
இந்திய தரப்பிலேயே மையமாகக் கொண்டு செயல்படும் 14 ஆவது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பங்கேற்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் விதிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. பாங்கோ சோ ஏரிக்கரையில் படைவிலக்கல் நடவடிக்கைகளை விரிவு படுத்துவதாக இருதரப்பும் விவாதித்ததாக தெரியவருகிறது. இதில் கிழக்கு லடாக்கின் ஹாட்ஸ்பிரிங்ஸ் கோக்ரா மற்றும் தேப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி அமைதியை ஏற்படுத்துவதாக இந்தியா வலியுறுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளன.