Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக அரசு, வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறியதாவது, வரும் 16ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |