Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி, பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி….!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட ரங்கசாமி லைன் பகுதியில் ஏராளமான விசைத்தறி மற்றும் கூலி வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகாலமாக ஏலச் சீட்டில் உறுப்பினர்களாக சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சீட்டு ஏலம் முடியும் தருவாயில் உள்ள போது பாஸ்கர் திடீரென தலைமறைவான தாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை அப்பகுதி பொதுமக்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் தங்களிடம் மோசடி செய்த பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Categories

Tech |