தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.மழை காலங்களில் பொதுவாக நிறக் குறியீடு வைத்தும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை வைத்து மழையின் அளவை சொல்லுவது வழக்கம். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் மழைக்கான குறியீடு உள்ளது. சிவப்பு என்றால் அதி கனமழை பெய்யும். பல இடங்களில் மின்கம்பங்கள் சரியும், மரங்கள் சரியும் இது சிவப்பு நிற எச்சரிக்கை ஆகும்.
அதைவிட கொஞ்சம் குறைவாக மிக கனமழை பெய்யும். ஒரு இடங்களில் பலத்த காற்று வீச வாய்ப்பிருக்கிறது. இது ஆரஞ்ச் அலர்ட் என்று சொல்லுவாங்க. மஞ்சள் அலர்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கனமழை இருக்கும். மற்ற இடங்களில் எல்லாம் மிதமான மழை இருக்கும். தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக வர வாய்ப்பு இருப்பதால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம் என்பது தான் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை ஆகும்.