Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு மஞ்சள் அலெர்ட்… தடைப்பட்ட ஓணம்… வேதனையில் மக்கள்..!!

கேரளாவில் மீண்டும் கனமழை தொடங்க உள்ள நிலையில் ஓணம் கொண்டாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மழையின் தீவிரம் அதிகரித்து, மலப்புரம், வயநாடு   உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் விளைநிலங்கள் சேதமாகி உயிரிழப்புகளும்.ஏற்பட்டன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாத இறுதியில் மழையின் தீவிரம் குறைந்த நிலையில் நிவாரணப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது.

Image result for ஓணம் பாதிப்பு

குறிப்பாக மலையோர கிராமங்களில் கடற்கரை பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வல்லநாடு, ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Image result for ஓணம் பாதிப்பு

கேரளாவின் பிரசித்திபெற்ற பண்டிகையான ஓணம் வருகின்ற 11ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி அம்மாநிலத்தில் 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிடுவது வழக்கம் இந்நிலையில் மழை பெய்து வருவதால் கோலமிட முடியாத சூழல் ஏற்பட்டு கொண்டாட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை என்பது வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதாகும்.

Categories

Tech |