மதுரை மாவட்டத்தில் மது போதையில் தந்தையை அடித்துக் கூறுகின்றார் மகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள பல்கலை நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு அருணா என்ற மக்களும், அரவிந்த் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மகன் அரவிந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அண்ணாதுரை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு ஆத்திரமடைந்த அரவிந்த் அண்ணாதுரையை சரமாரியாக தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்துஅவரது மனைவி ஜெயமணி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.