Categories
கன்னியாகுமாரி தற்கொலை மாவட்ட செய்திகள்

என் தந்தை இறப்பை தாங்க முடியல… உயிரை விட்ட மகள்… கதறி அழுத குடும்பம்…!!!

சுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குலசேகரன் புதூர் சமத்துவபுரம் நெய்தல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவருக்கு உமாமகேஸ்வரி எனும் 20 வயதுடைய மகள் இருந்தார். அவர் பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார் திடீரென இறந்துவிட்டார். இதனால் உமாமகேஸ்வரி மிகவும் மனமுடைந்து விட்டார். தந்தை இறந்ததால் அவர் மிகவும் சோகத்தில் இருந்தார். குடும்பத்தினரிடமும் பேசவுமில்லை.

இந்நிலையில் வழக்கம்போல் உமா மகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு உறங்க சென்றார். நேற்று அதிகாலை உமா மகேஸ்வரியை எழுப்புவதற்காக அவரது தாய் உமாவின் அரைக்கு சென்றுள்ளார். அப்போது உமா மகேஸ்வரி தூக்கில் தொங்கி இறந்ததை பார்த்து அவரது தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனடியாக இது குறித்து உமாமகேஸ்வரின் சகோதரன் சுரேஷ் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் விரைந்து இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்ஆகியோர்  உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை இழந்த சோகத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |