முகக்கவசம் அணிய வில்லையா என்று கேள்வி கேட்ட கார் ஓட்டுனரை அதில் பயணம் செய்த பெண் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
நேபாளத்தைச் சேர்ந்த கத்கா என்பவர் 8 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஓட்டுநர் பணி செய்து வந்துள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் ஓலா நிறுவனத்தின் கத்கா கார் ஓட்டுனராக பணியாற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் காரில் பயணம் மேற்கொள்வதற்காக 3 பெண்கள் வந்தனர். கக்கா தனது காரில் 3 பெண்களையும் ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்த போது அவர்களில் ஒருவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் முகக்கவசத்தை அணியுமாறு கேட்டார் அதற்கு அப்பெண் என்னிடம் முகக்கவசம் இல்லை என்று திமிராக பதில் கூறியுள்ளார்.
ஆகையால் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி முகக்கவசத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பெண்கள் முகக்கவசமெல்லாம் வாங்க முடியாது என்று கூறி கத்காவிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் காரில் இருந்து இறங்க மேலும் கத்காவின் செல்போனை பிடுங்கி எறிந்து கவசத்தை கிழித்தும் ஓட்டுநரின் முகத்தின் முன்பு வேண்டுமென்றே இருமி எங்களின் கொரோனா உனக்கும் ஒட்டி கொள்ளட்டும் என்று கூறி கேலியும் கிண்டலும் செய்து மிகக் கடுமையாக நடந்து கொண்டனர்.
அப்பெண்கள் செய்த ரகளை அனைத்தும் காரில் உள்ள செக்யூரிட்டி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அவர்கள் இறங்கும் இடம் வந்தவுடன் அவர்கள் ஓட்டுனர் மீது பெப்பர் ஸ்பிரேவை அடித்துள்ளனர். இதுபற்றி கார் ஓட்டுநர் கத்கா நான் அவர்களிடம் தவறாக எதுவும் கூறவில்லை முககவசத்தை மட்டுமே அணியுமாறு கூறினேன் என்று தெரிவித்தார். அதற்கு பயணிகளில் ஒரு பெண் எங்களை நடுரோட்டில் இறக்கிவிட பார்த்தார் அதனால்தான் அவரிடம் தகராறு செய்தோம் என்றார் .
ஆனால் இந்த வீடியோவில் அனைத்தும் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று குறை கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஓலா நிறுவனமும் காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.