எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாய் பகுதியில் விபத்துக்குள்ளானதால் இழப்பீடு கேட்டு எகிப்து அரசு கப்பலை பறிமுதல் செய்துள்ளது.
சீனாவிலிருந்து 20000 கன்டைனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. ராட்சச எவர்கிரீன் கப்பலினால் இந்த கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்தே நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டது.
மனிதர்களின் முயற்சிக்கு பிறகு எவர்கிரீன் கப்பலை மீண்டும் மிதக்க செய்தனர். ஆனால் கால்வாய் ஆணையம் எவர்கிரீன் கப்பல் நிறுவனத்திடம் மீட்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் சம்பளம் தீர்க்கும் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் இழுவை படகுகளுக்கும் கால்வாயில் ஏற்பட்ட வேதத்திற்கும் மணலை அப்புறப்படுத்துவதற்கும் வணிக நீதியான இழப்பு என அனைத்திற்கும் சேர்த்து இழப்பீடு கேட்டது.
அதாவது சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக தரவேண்டுமென்று எகிப்த் அரசு கூறியுள்ளது. எவர்வின் கப்பல் விபத்து குறித்து சூயஸ் கால்வாய் நிறுவனம் எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. ஆகையால் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் சூயஸ் கால்வாய் நிறுவனத்திற்கு தகுந்த இழப்பீடு அளிக்கும் வரை கப்பலை பறிமுதல் செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இது எவர்கிரீன் கப்பல் நிறுவனத்திற்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.
ஆகையால் எவர்கிரீன் கப்பல் நிறுவனமும் சூயஸ் கால்வாய் நிறுவனமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையிலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் தற்போது எவர்கிரீன் கப்பல் ‘கிரேட் பிட்டர் லேக்’ என்ற அகலமான சூயஸ் கால்வாய் பகுதியைச் சேர்ந்த ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
சர்வதேசக் கடல் பகுதியை அடைவதற்கு சூயஸ் கால்வாயிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டும் என்றும் விசாரணை முடிந்து இழப்பீட வழங்கிய பிறகு தான் கப்பலை விடுவிப்போம் என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி ஏற்கனவே கூறியிருக்கிறார்.