இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸின் 2 வது அலை மிக வேகம் எடுத்துள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் இந்திய மருத்துவமனையில் உள்ள படுக்கைகளும் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும் பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆக்சிஜன் உபயோகத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆகையால் இது போன்ற கடுமையான சூழ்நிலைக்கு இந்தியாவிற்கு பெரிதும் உதவ தயாராக உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தக் கடுமையான நிலையை கட்டுப்படுத்துவதற்கு எந்த வகையில் இந்தியாவிற்கு உதவலாம் என்று ஆராய்ந்து கொண்டிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.