Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க!….ஜே.இ.இ. தேர்வில் தில்லுமுல்லு…. வசமாக சிக்கிய ரஷ்ய ஹேக்கர்….. சிபிஐ அதிரடி…!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் கொரோனா கட்டுப்பாட்டால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற மெயின் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அஃப்னிட்டி எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இணை வழியாக நடைபெற்ற தேர்வில் கேள்வித்தாளை தேர்வு கூடத்துக்கு வெளியில் இருந்து தொடர்பு கொண்டு உள்ளனர். அதன் பிறகு தேர்வு எழுதிய நபர்களின் கணினிகளை ரிமோட் ஆக்ஸஸ் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தேர்வர்களுக்கு பதிலாக வெளியில் இருந்தவர்கள் பதில் அளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரியானா மாநிலம் சோனேபட்டியலில் உள்ள ஒரு தனியார் தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்ததும், தேர்வு மைய ஊழியர்களுக்கு இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பத்தவர்களிடம் பெரிய அளவில் தொகையை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு என்ஐடியில் சேர்க்கை உதவியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர்கள் மூவரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில் வழக்குடன் தொடர்புடைய ரஷிய அவர் சிபிஐ நேற்று கைது செய்தனர். அவருக்கு எதிராக ஏற்கனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நபர் வெளிநாட்டில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அதிகார்களால் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |